வெள்ளி, 14 மார்ச், 2025

சேலம் சோனா கல்லூரி மற்றும் டேன்கேம் இணைந்து நடத்திய மிகப்பெரிய ஹேக்கத்தான்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் சோனா கல்லூரி மற்றும் டேன்கேம் இணைந்து நடத்திய மிகப்பெரிய ஹேக்கத்தான்.

சோனா தொழில்நுட்பக் கல்லூரியும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மையமும் (டேன்கேம்) இணைந்து இரண்டாவது முறையாக தமிழ்நாட்டில் பொறியியல் துறையில் 
பெண்களுக்கான மிகப்பெரிய  ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தின. மாணவிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், சிக்கலைத் தீர்ப்பதில் தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்தவும் ஒரு தளத்தை உருவாக்கி, படைப்பாற்றல், ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஊக்கியாகச் செயல்பட, டேன்கேம் இன்ஜினியரிங் பெண்களுக்கான ஹேக்கத்தான் போட்டிகள் வடிவமைத்துள்ளது. மேலும் மாறுபட்ட பொறியியல் சமூகத்தை வளர்ப்பதில் உறுதி பூண்டுள்ளது, அங்கு பெண்கள் செழித்து, வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளின் முன்னேற்றத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க உள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் பொறியியல் துறையில் பெண்களுக்கான மிகப்பெரிய ஹேக்கத்தான் போட்டிகள் சோனா கல்லூயில் நடைபெற்றன. 
முன்னதாக சோனா கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் சோனா கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் முன்னிலை வகித்தார், விழாவில் சிறப்புவிருந்தினர்களாக டசால்ட் சிஸ்டம்ஸ், கேட்டியா பிராண்ட் நிறுவனத்தின் உலகளாவிய துணைத் தலைவர் பெசன் ஃபிரடெரிக், டேங்கேம்-இன் பெருநிறுவன மற்றும் தொழில்துறை துணைத் தலைவர் தென்றல் ராஜேந்திரன், டேங்கேம்-இன் தலைமை இயக்க அதிகாரி விஜயதீபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 
இதனைத் தொடர்ந்து, திறன்மிகு நகர்ப்புற வளர்ச்சி எனும் தலைப்பின் கீழ்  திறன்மிகு மொபிலிட்டி & குறைக்கப்பட்ட நெரிசல், பசுமை உள்கட்டமைப்பு & காலநிலை மீள்தன்மை நாளைய உள்கட்டமைப்பு உள்ளடக்கிய வீட்டுவசதி & சமூக மேம்பாடு. நிலையான எரிசக்தி மற்றும் ஸ்மார்ட் கிரிட்கள் தரவு சார்ந்த நகர்ப்புற திட்டமிடல் பசுமையான எதிர்காலத்திற்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டு உபகரணங்கள் . நிலையான வண்ணப்பூச்சுகள், குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் நகர்ப்புற வாழ்க்கைக்கான தீர்வுகள் ஸ்மார்ட் கழிவு மேலாண்மை & வட்ட பொருளாதாரம். என்ற தலைப்புகளில் போட்டிகள் நடைப்பெற்றன இந்த போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். 
இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.1லட்சம் இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிராம். மூன்றாம் பரிசாக ரூ.30 ஆயிரம், மேலும் முதல் 7 அணிகளுக்கு சிறப்பு பரிசாக ரூ10 ஆயிரம் ரூபாய்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை கல்லூரியின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா, முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் மற்றும் சிறப்புவிருந்தினர்கள் ஆகியோர் வழங்கி அவர்களுக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். 
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சோனா கல்லூரியின் மெக்கானீகல் துறைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பேராசிரியர்கள் குழு சிறப்பாக செய்திருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: