திங்கள், 3 மார்ச், 2025

தஞ்சையில் தனி வட்டாட்சியராக பணியாற்றி விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை மீட்டு தர வேண்டும். தனித் தாசில்தாரின் மனைவி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் தனது தங்கை மற்றும் அவரது கணவர் ஆகியோர் மீது கண்ணீர் மல்க புகார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தஞ்சையில் தனி வட்டாட்சியராக பணியாற்றி விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை மீட்டு தர வேண்டும். தனித் தாசில்தாரின் மனைவி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் தனது தங்கை மற்றும் அவரது கணவர் ஆகியோர் மீது கண்ணீர் மல்க புகார். 

சேலம் மாவட்டம் வாழப்பாடி குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமித்ரா. இவருக்கும் அவரது உறவினரின் மகன் செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. ஜெயமித்ராவின் கணவரான செந்தில்குமார் முத்திரைத்துறை தனி வட்டாட்சியராக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்றும் தற்பொழுது ஜெயமித்ரா 7 மாத கர்ப்பிணி ஆகவும் இருந்து வருகிறார். 
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பத்தாம் தேதி அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த செந்தில்குமார் வேகத்தடையில் தூக்கி வீசப்பட்டதில் கழுத்தில் அடிபட்டு ஆபத்தான நிலையில் தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏழு மதத்தை கர்ப்பிணியாக உள்ள ஜெயமித்ரா தற்பொழுது தனது தாய் வீட்டில் உள்ள நிலையில் கணவரின் விபத்து குறித்து தகவல் அறிந்து மதுரை சென்று விசாரித்தபோது, அரசு துறை அதிகாரியான தனது கணவரின் அரசு பலன்கள் அனைத்தும் தங்கை மற்றும் தங்கையின் கணவர் ஆகியோருக்கு சென்று அடைய வேண்டும் என்பதற்காக அவரது ஏடிஎம் கார்டு மற்றும் அவரது மாத ஊதியத்தையும் தனக்கு வழங்காமல் அபகரித்து தனது கணவரின் அரசு பலன்கள் அனைத்தையும் அபகரிக்க முயற்சிப்பதாக கண்ணீர் மல்க சேலம் மாவட்ட ஆட்சியர் திருமதி பிருந்தா தேவி அவர்களிடம் புகார் மனு அளித்தார்.
 இதுகுறித்து ஜெயமித்ரா நம்மிடையே கூறுகையில் தனது கணவரின் தங்கை ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் செந்தில்வேல் இருவரும் தான் மூன்று லட்சம் ரூபாய் செலவழித்து தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என்று குற்றம் சாட்டிய அவர் தங்களது நான் எந்த வரதட்சணையும் கொடுக்கவில்லை தற்பொழுது நீ வரதட்சணையாக 25 லட்சம் ரூபாய் பணமும் உன்னுடைய நகைகள் ஐந்து சவரன் மற்றும் தனது கணவரின் கார் எடுத்துக் கொண்டு வந்தால் உன் கணவரை பார்க்க விடுவேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் இல்லையெனில் கணவரை பார்க்கவே விடமாட்டோம் என மிரட்டி வருகிறார்கள் என்று தனது ஒரு வயது பெண் குழந்தையுடன் கண்ணீர் மல்க தெரிவித்தார். 
மேலும் தனது கணவர் தங்கையின் கணவர் செந்தில்வேல் சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி வருவதாகவும் அந்த அதிகாரத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து தாங்கள் எங்கு புகார் மனு கொடுத்தாலும் தங்களுக்கான நீதி கிடைக்கவில்லை எனவே தாயுளம் கொண்ட சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தனது கணவரை தன்னிடம் மீட்டு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: