சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக முதலமைச்சரின் 72 ஆவது பிறந்தநாள் விழா... பரிசு பொருள் தீர்ந்த பிறகும் வந்த பொதுமக்களுக்கு அதற்கான தொகையை வழங்கி மகிழ்ச்சியை ஏற்படுத்திய திமுக ஒன்றிய செயலாளர்.
திராவிட மாடலின் நாயகரும், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அந்த கட்சியினரால் ஏழை எளியவர்களுக்கு நல உதவிகளை வழங்கி எழுச்சியாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவையொட்டி 500 ஏழை எளியவர்களுக்கு பித்தளையால் ஆன குத்துவிளக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலம் உடையாபட்டி மாரியம்மன் கோவில் திடல் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் மற்றும் சேலம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகுத்தனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு பித்தளையால் ஆன குத்துவிளக்குகளை வழங்கி பாராட்ட தெரிவித்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்த நிர்ணயிக்கப்பட்ட 500 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த விழாவில் குத்து விளக்கு தீர்ந்த நிலையில், சற்றும் தயங்காத சேலம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார் குத்துவிளக்கு உண்டான தொகையினை எஞ்சியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்வித்தார். இந்த நிகழ்வு விழாவில் கலந்து கொண்ட அனைவரிடையயும் மிகுந்த பாராட்டுகளை பெற்றது.
0 coment rios: