சேலம் ரவுடி ஜான்  ஈரோடு அருகே கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈரோடு நீதிமன்றத்தில் சேலம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவர் சரண் .. ஏப்ரல் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல்...
சேலம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த பல்வேறு வழக்கில் தொடர்புடைய ஜான்  கடந்த 19ஆம் தேதி வழக்கு ஒன்றிற்காக சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து விட்டு திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மற்றொரு கும்பல் சேலம் -கோவை தேசிய நெடுஞ்சாலை நசியனூர் அருகே கந்தம்பாளையம்  என்ற இடத்தில் ரவுடி ஜானை வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலை  தொடர்பாக காவல்துறையினர் சதீஷ் , சரவணன் , பூபாலன் என 3 பேரை சுட்டு பிடித்தும் , கார்த்திக் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும்   சலீம் மற்றும் ஜீவகன் மற்றும் கோகுல சுகனேஸ்வரன் ஆகிய 3 பேர்  ஈரோடு  நீதிமன்றத்தில் சரண்டைந்தனர்.இந்த வழக்கில் இது வரை 9 பேர் கைது செய்யப்படும் 3 பேர் நீதிமன்றத்திலும் சரண்டைந்துள்ளனர்.
இதனிடையே ரவுடி ஜான் கொலை தொடர்பாக  சேலம் கிச்சிபாளையத்தைச்  துரைசாமி என்பவர் ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.. வழக்கை விசாரித்த நீதிபதி அப்சல் பார்த்திமா துரைசாமியை  மீண்டும் ஏப்ரல் 7ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்தக்கோரியும் , அதுவரை திருப்பூர் சிறையில் அடைக்க நீதிபதி  உத்தரவிட்டார்.
 by
 by 
0 coment rios: