சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழா வண்ண வண்ண கோல போட்டி. ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சரும் திராவிட மாடல் நாயகருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாளை திமுகவினரால் தமிழகம் முழுவதும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக, சேலம் மாநகராட்சி 9வது கோட்டம் ஜெய் மெட்ரிக் பள்ளி வீதியில் பொதுமக்கள் ஆர்வமாக அழகிய வண்ண கோலம் இட்டனர். இந்த நிகழ்வினை சேலம் ஒன்பதாவது கோட்ட மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வ லிங்கம் பார்வையிட்டு பொதுமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ராஜா, கோட்ட கழக செயலாளர் லோகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: