வெள்ளி, 4 ஏப்ரல், 2025

ஈரோட்டில் நாளை (6ம் தேதி) 108 ஆம்புலன்ஸ் வேலைக்கு முகாம்!

108 ஆம்புலன்சில் பணிபுரிய ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. 
ஓட்டுனருக்கு கல்வித் தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் 162.5 சென்டிமீட்டர் குறையா மல் இருக்க வேண்டும்.

இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும் .தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15ஆயிரத்து 820 மொத்தமாக வழங்கப்படும்.

இந்த பணிக்கான தேர்வு முறையானது எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்தபட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு. அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., (பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்.சி., விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி இதில் ஏதேனும் ஒரு பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மாதம் ஊதியம் ரூ.16 ஆயிரத்து 20 வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதற்கான தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும் பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். மேலும், விவரங்களுக்கு, 73388 94971 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அம்பிகாசன் என தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: