சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் திமுக மாணவரணி சார்பில் இல்லம்தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
சேலம் மத்திய மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் இல்லங்கள் தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் சேலம் கன்னங்குறிச்சி மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்த தீவிர மாணவர் உறுப்பினர் சேர்க்கை முகாமினை துவக்கி வைத்தார். கன்னங்குறிச்சி மாரியம்மன் கோவில் திடலுக்கு வந்த அவர் இல்லங்கள் தோறும் நடந்தே சென்று மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை படிவங்களை கொடுத்து சம்பந்தப்பட்ட இல்லங்களிலேயே உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். இதனை அடுத்து சேலம் கன்னங்குறிச்சி மாரியம்மன் கோவில் திடல் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களை திமுக மாணவர் அணையில் இணைத்துக் கொள்ள அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரிடம் வழங்கினர். கட்சியில் புதிதாக சேர்ந்த மாணவர் அணியினரை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வாழ்த்தி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட திமுக மாணவர் அணி துணை செயலாளர் தமிழரசன், மாநகரச் செயலாளர் ரகுபதி, மாவட்ட அமைப்பாளர் கோகுல் காளிதாஸ், பேரூராட்சி செயலாளர் தமிழரசன், பொதுக்குழு உறுப்பினர் பூபதி உள்பட பலர் உடன் இருந்தனர்.
0 coment rios: