ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

தமிழக முதலமைச்சரின் 72 ஆவது பிறந்தநாள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கி பாராட்டு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

தமிழக முதலமைச்சரின் 72 ஆவது பிறந்தநாள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கி பாராட்டு. 

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவையொட்டி சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் மத்திய மாவட்டம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக நடத்தப்பட்டன. குறிப்பாக கராத்தே போட்டி கோல போட்டி கிரிக்கெட் போட்டி கைப்பந்து போட்டி என ஏராளமான விளையாட்டுகளில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினரும் தங்களது முழு திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர். இவர்களுக்கான பரிசளிப்பு விழா சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த விழாவில் மதிய மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் தமிழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் அறிவிக்கப்படாத வாக்குறுதிகளையும் செயல்படுத்தி மக்கள் மனதில் நீங்காத இடத்தை திமுக அரசு பெற்று வருவதாகவும் தெரிவித்த அவர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் குடும்பப் பெண்கள் நலன் கருதி தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து பட்டியலிட்டு பேசினார். தொடர்ந்து தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விளையாட்டு விழா போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து தரப்பினருக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: