சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா தென்னிந்திய அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டி சேலத்தில். அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
.
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது,
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி சேலம் நேரு கலையரங்கில் வருகிற மே 17 மற்றும் 18-ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த போட்டியை இந்தியன் பாடி பில்டர் பெடரேஷன் ,தமிழ்நாடு அமைச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன், சேலம் மாவட்ட அமைச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் ஆகியோர் இணைந்து நடத்துகிறார்கள். இந்த போட்டியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைக்கிறார். இந்த போட்டியில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த 350 பேர் பங்கேற்கிறார்கள். 13 பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு தலா 10,000 7,000 5,000 3,000 2,000 என ரொக்க பரிசு ,மெடல் , சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
மேலும் இறுதிப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரருக்கு ஒரு லட்சம் ரொக்க பரிசம், ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான இருசக்கர வாகனம் , இரண்டாம் இடம் பிடிக்கும் வீரருக்கு 50,000 மூன்றாம் இடம் பிடிக்கும் வீரருக்கு 25 ஆயிரம் மற்றும் அனைவருக்கும் பதக்கம் சான்றிதழ் பட்டயமும் வழங்கப்படுகிறது. இறுதி போட்டியில் வெற்றிபெறும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரருக்கு ரூபாய் 25,000 பணம் எல் இ டி டிவி, சீல்டுபதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை சேலம் மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்க தலைவர் சுரேஷ்குமார் சிறப்பு பரிசாக வழங்குகிறார். இந்த போட்டி சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின் போது
சேலம் பாராளுமன்ற தொகுதி எம்.பி. டி.எம். செல்வகணபதி, சேலம் மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கத் தலைவர் சுரேஷ்குமார், தமிழ்நாடு அமைச்சூர் ஆணழகன் சங்க சேர்மன் அரசு, தலைவர் பாஸ்கர் ,செயலாளர் பாலமுருகன் ,சேலம் மாவட்ட செயலாளர் மயில்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
0 coment rios: