சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஜெயந்தி விழாவையொட்டி 108 பால்குட ஊர்வலம். அம்மனுக்கு விசேஷ அபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஆர்ய வைஸ்ய மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் ஜெயந்தி விழாவையொட்டி, ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை சார்பாக ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ அலங்கார பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சேலம் சின்ன கடைவீதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால சாமி திருக்கோவிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவையின் நிறுவனரும், தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவருமான டாக்டர் நாகா. அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ய வைஸ்ய பெண்கள் கலந்து கொண்ட இந்த பால்குட ஊர்வலத்தினை சேலம் மாநகர துணை மேயர் திருமதி சாரதா தேவி மற்றும் சின்னத்திரை நடிகை அர்ச்சனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பால்குட ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
கடைவீதி மற்றும் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் வழியாக அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தை அடைந்தது. தொடர்ந்து, மூலவரான ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றன. இந்த ஜெயந்தி விழா சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சியில் தெலுங்கு பேசும் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டது மகாதீப ஆராதனைகள் நடைபெற்றன. இதனை அடுத்து விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டன. ஜெயந்தி விழா சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை நிர்வாகிகளும் தேவஸ்தான நிர்வாகிகளும் சிறப்பாக செய்திருந்தனர்.
0 coment rios: