சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
கோடைகாலத்தை ஒட்டி சேலத்தில் துவங்கிய மெகா பிசினஸ் மற்றும் ஹோம் எக்ஸ்போ 2025.
அடிநிலா ஈவன்ட் மீடியா நிறுவனத்தின் சார்பில் பல்வேறு நிறுவன பங்களிப்புடன் சேலத்தில் 2-வது மிகப்பெரிய அளவிலான பிசினஸ் மற்றும் ஹோம் எக்ஸ்போ 2025 இன்று துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த மெகா எக்ஸ்போ சேலம் ஐந்து ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் துவக்கப்பட்டுள்ளது. மிக பிரம்மாண்டமான முறையில் 200 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 80-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பிசினஸ் மற்றும் ஹோம் அப்ளையன்சஸ் உட்பட அனைத்து விதமான பொருட்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது பார்வையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.
இலவச அனுமதியுடன் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த மெகா எக்ஸ்போ நிகழ்வினை சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தற்போது சூழலில் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக நாட்டம் கொண்டுள்ள பொது மக்களுக்கு அவர்கள் ஆர்டர் செய்த பொருட்கள் வீட்டிற்கு வரும்போது ஏமாற்றம் என்பது மட்டுமே நிதர்சனமாக உள்ள நிலையில் இந்த எக்ஸ்போவில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பப்பட்ட பொருட்களை நேரில் பார்த்து அதனை கொள்முதல் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார் அடிநிலா ஈவென்ட் மீடியா நிறுவனத்தின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சங்கர். அப்போது நிர்வாகிகள் ரஞ்சித் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
0 coment rios: