சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி. ஒரு வார காலம் நடைபெறும் கோடை விழாவினை அமைச்சர் பெருமக்கள் துவக்கி வைத்தனர்.
கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அரசன் என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சியினை வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். ஏற்காடு அண்ணா பூங்காவில் நடைபெற்ற துவக்க விழாவில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் வனச்சுழல் போன்று யானை, காட்டு எருமை, முயல், குரங்கு, பாம்பு, மான், புலி போன்ற வனவிலங்குகள் உள்ளடக்கி சிகப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை வண்ண 50,000 ரோஜா மலர்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அண்ணா பூங்காவில் சேலம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணை 16 கண் மதகு வழியாக தண்ணீர் வெளியேறும் காட்சி போல் வெள்ளை சிகப்பு, மஞ்சள் போன்ற 73,000 வண்ண ரோஜா மலர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மையின் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் வெள்ளை, மஞ்சள், சிகப்பு போன்ற வண்ணம் கொண்ட 5,640 ரோஜா மலர்களாலும், சிந்து சமவெளி முத்திரையில் உள்ள பழம்பெரும் உயிரினமான ஒற்றை கொம்பு குதிரை போன்ற உருவம் 7,000 ரோஜா மலர்களைக் கொண்டும், கோடையின் தாக்கத்தையும் மக்களின் தாகத்தையும் தணிக்க வந்த தர்பூசணி பழத்தின் உருவம் 6,280 கார்னேஷன் மலர்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன் கதாபாத்திரங்களான பிக்காச்சு, சார்மண்டர் போன்ற உருவங்கள் வெள்ளை, மஞ்சள், சிகப்பு நிறம் கொண்ட கார்னேஷன் மலர்களாலும், அரசு தாவரவியல் பூங்கா I–ல் தாவரங்களின் மகரந்த சேர்க்கையை செய்யும் தேனீயின் உருவம் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட 5,600 ரோஜா மலர்களாலும், அரசு தாவரவியல் பூங்காவில் இரட்டை இதயம் போல் வடிவம் கொண்ட செல்பி பாய்ண்ட் 1,400 ரோஜா மலர்களைக்கொண்டும், ரோஜா பூங்காவில் சிறகு இதயம் போல் செல்பி பாய்ண்ட் 1,400 ரோஜா மலர்களாலும் அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பூங்காவில், தோட்டக்கலைத் துறையின் வளத்தை தெரிவிக்கும் வகையில், பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், வாசனைப் பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் அனைத்தும் திடல் அமைத்து மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தபட்டுள்ளது. 30,000-க்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டு, அண்ணா பூங்கா வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஏரி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வண்ண மலர்களால் ஆன செல்ஃபி பாயிண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோடை விழா நடைபெறும் அனைத்து நாள்களிலும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலைப்பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை சார்பில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள நடைபெற்றன. வரும் நாட்களில்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில் நாள்தோறும் பல்வேறு வகையான போட்டிகளும் நடத்தப்படுகின்றது.