திங்கள், 12 மே, 2025

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக எடப்பாடி ஆரின் 71 வது பிறந்த நாள் விழாவையொட்டி மாபெரும் ரத்ததான முகாம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக எடப்பாடி ஆரின் 71 வது பிறந்த நாள் விழாவையொட்டி மாபெரும் ரத்ததான முகாம்.

தமிழக எதிர் கட்சித் தலைவரும்,  அதிமுக பொது செயலாளர்  எடப்பாடி திரு. பழனிசாமி அவர்களின் 71 வது பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற இரத்ததான முகாமில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் எம் கே செல்வராஜ் அவர்கள் துவக்கி வைத்தார். சேலம் கந்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற இவ்விழாவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு அனைத்து நிர்வாகிகள் உள்பட ஆ தி மு க.வினர் ஏராளமான ரத்த தானத்தை சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு தானமாக வழங்கினார். இந்த நிகழ்வில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: