சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
நடிகர்கள் சந்தானம் மற்றும் ஆர்யா உட்பட பட குழுவினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாநகர காவல் ஆணையரிடம் சேலம் கிழக்கு மாவட்டத்தை பாஜக வழக்கறிஞர் புகார் மனு.
சேலம் கிழக்கு மாவட்ட பாஜக லீகல் விங் செயலாளர் அஜித் சாக்கோ என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சேலம் மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர்கள் சந்தானம் மற்றும் ஆர்யா உள்ளிட்ட படுக்குழுவினரின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புகார் மனு அளிக்க வந்திருந்தனர். அந்த மனுவில் இந்து மத மக்களால் புனிதமாக கருதப்படும் புனித வழிபாட்டு இடங்களான 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையானை வழி மட்டும் பூஜித்தும் வருகின்றனர். இந்து மதத்தை நிந்திக்கும் உட்படுத்துடனும் அவமதிக்கின்ற வகையிலும் இந்து மக்களின் வழிபாட்டு முறையை சிதைக்கின்ற எண்ணத்துடனும் ஆச்சாரத்தை கெடுத்தும் இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் எண்ணத்துடன் வேண்டுமென்றே வாய்மொழியாகவும் சைகைகளாலும் மத வழிபாட்டை மத சடங்குகளை அசிங்கப்படுத்தி வழிபாட்டு வார்த்தையான கோவிந்தா என்ற புனித சொல்லை கலைத்து குழப்பம் விளைவித்து, இந்து மத உணர்வுகளை புண்படுத்தி அதை பாடலாக இந்தியாவில் உள்ள அனைத்து இந்து மக்களும் கேட்கும் படியும் பார்க்கும் படியும் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலான கோவிந்தா கோவிந்தா கிஷா 47 என்ற பாடலை வெளியிட்டு அதில் இந்து மக்களின் கடவுள்களில் ஒன்றான பெருமாளையும் அவர் இருக்கும் புனித தனமான திருப்பதி கோவிலை அசிங்கப்படுத்தி மத உணர்வுகளை புண்படுத்திய டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் நடிகர்களான சந்தானம் மற்றும் சூர்யா இது போக அந்த படக்குழுவினர் அனைவரின் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என சேலம் மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் இந்துக்களில் இஷ்ட தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் பாடல் ஆன கோவிந்தா கோவிந்தா பாடலை சம்பந்தப்பட்ட படத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிகழ்வின் போது சேலம் கிழக்கு மாவட்ட பாஜக லீகல்விங்கு மாவட்ட செயலாளர் அஜித் சாக்கோ ஆதரவாளர்கள் கிருபாகரன் கார்த்திக் மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
0 coment rios: