சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பொதுமக்களின் அனைத்து தேவைகளிலும் நிறைவடைந்த பேரூராட்சியாக மல்லூர் திகழ்கிறது. எரிவாயு தகனமேடை அர்ப்பணிப்பு விழாவில் மல்லூர் பேரூராட்சி தலைவர் வேங்கை அய்யனார் பெருமிதம்.
சேலம் மாவட்டம் மல்லூர் முதல் நிலை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராம மக்களுக்கும் தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகள் நல்ல பட திட்டங்கள் ஆகியவற்றை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பேரூராட்சி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையான மென்மையான அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், இதனை ஏற்றுக் கொண்ட பேரூராட்சித் தலைவர் வேங்கை அய்யனார் தமிழக அரசிடம் முறையிட்டு அதற்கான நிதியை பெற்று சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள பெரம்பலூர் பகுதியில் அதற்கான பணிகளை துவக்கி இன்று பொதுமக்களுக்கான மின்மயான தினை அர்ப்பணித்தார். இதுகுறித்து வேங்கை அய்யனார் அப்படியே கூறுகையில் மல்லூர் பேரூராட்சி மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி பூர்த்தி அடைந்த பேரூராட்சியாக மல்லூர் திகழ்ந்து வருவதாகவும் இந்த நிலையில் தற்பொழுது பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனம் என வேங்காம்பட்டி கைக்குத்தல் குப்புசாமி நினைவு அறக்கட்டளை சார்பாக பிரேதும் எரியூட்டும் பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளதால், மல்லூர் பேரூராட்சியின் வார்டு எண் 1 முதல் 15 வரையில் உள்ள பொதுமக்களுக்கு மட்டும் குளிர்சாதன பெட்டி, அமரர் ஊர்தி மற்றும் சடலங்காய் ஏறியூட்டுவதற்கான தொகையை சம்பந்தப்பட்ட அறக்கட்டளையே ஏற்கும் என்று தெரிவித்த அவர் சம்பந்தப்பட்ட எரியூட்டும் தொகையினை தமிழக அரசுக்கு அறக்கட்டளையின் வாயிலாக செலுத்தப்படும் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க தலைவர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: