வெளி மாநில பக்தர்கள் வருகை புரிவதால் கொடுமுடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என காங்கிரஸார் சங்கு ஊதும் போராட்டம்..!
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெற்ற அரசியலமைப்பை காப்போம் எனும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப் பெருந்தகையிடம், வருகின்ற 30/06/2025 அன்று ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெறும் ஈரோடு ரயில் நிலைய நிர்வாகத்தை கண்டித்து, சங்கு ஊதும் போராட்டம் நடைபெறும் என முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவரான கே. என்.பாஷா ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ம. முகமது அர்சத், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் ஆகியோர் கோரிக்கை மனுவாக வழங்கினர்.
அதில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ராபர்ட் ப்ரூஸ் அவர்களிடம், இந்த நடைபெறும் ஆர்ப்பாட்டக் கோரிக்கையை கொடுத்தபோது அவர் படித்துப் பார்த்தபின் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கொடுமுடி மிகவும் புகழ் பெற்ற ஆன்மீக சிறப்பு வாய்ந்த ஊராகும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திற்கும் காவிரி ஆற்றங்கரைக்கும் பல வெளி மாநில பக்தர்கள் வருகை புரிவதால் கொடுமுடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நின்று சென்றன, 2021 கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் கொடுமுடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வரும் பாராளுமன்ற கூட்டர் தொடரில் குரல் கொடுப்பேன் என்பதுடன்,
ஒருவேளை ரயில்வே துறை இந்த கோரிக்கையை நிறைவேற்றமல் மெத்தன போக்கில் இருந்தால் ஈரோடு மாவட்டம் கொடுமுடி மக்களோடு, காங்கிரசார் சேர்ந்து நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்றார்.
0 coment rios: