S.K. சுரேஷ்பாபு.
உலக யோகா தினத்தில் அசத்திய வலசையூர் அரசு பள்ளி மாணாக்கர்கள்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு வலசையூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயலேந்திரன் தலைமை ஏற்று துவங்கி வைத்தார். ஓய்வு பெற்ற ஆசிரியை மணமல்லி மூச்சுப் பயிற்சி மற்றும் ஆசனங்களின் நன்மைகளை எடுத்துரைத்தார். இதில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 650 மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காண்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற் கல்வி ஆசிரியர்கள் யோகநாதன், ஸ்டாலின், அன்பன் டேனியல் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் ரவி, ஜோயல் ஞானதாஸ், ருத்ர கண்ணன், ராஜேஷ், அறிவழகன், சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: