திங்கள், 23 ஜூன், 2025

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 68-வது முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 68-வது முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா.


சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான 68-வது Fresher’s Day, 21 ஜூன் 2025, திங்கட்கிழமை, காலை 10.30 மணியளவில் மிகச்சிறப்பாக ஸ்ரீ வள்ளியப்பா கலை அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், திரு.LS. லக்ஷ்மணன், Head – Campus Hiring, VVDN Technologies  மற்றும் திரு.T. ஞானசேகரன், Block Education Officer, School Education ஆகியோர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டனர். முதலாமாண்டு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
கல்லூரியின் தலைவர் திரு.C.வள்ளியப்பா அவர்கள் தனது தலைமையுரையில், கடந்த 68 வருடங்களாக ஒழுக்கத்துடன் கூடிய சிறப்பான கல்வியை இக்கல்லூரி வழங்கி வருகிறது என்று கூறினார். மேலும், இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உலகளவில் சிறந்த தொழில்முனைவோர்களாகவும், முன்னணித் தொழில்நிறுவனங்களில் உயர் பதவிகளிலும் வாழ்வில் உயர்ந்த நிலையில் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி, புதிதாக சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் இக்கல்லூரியிலுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்தி, வாழ்வில் மேன்மேலும் வளர்ந்து கல்லூரிக்கும், பெற்றோருக்கும் நற்பெயரை பெற்றுத்தர வேண்டும் என்றும் வாழ்த்தினார். கல்லூரியின் துணைத்தலைவர் திரு.சொக்கு வள்ளியப்பா அவர்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்து, மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். கல்லூரியின் துணைத்தலைவர் திரு.தியாகு வள்ளியப்பா அவர்கள், மாணவர்கள் Industry relatedProjects செய்ய வேண்டும் என்றும், Start-up Activities மூலமாக இளம்
தொழில்முனைவோர்களாக முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
கல்லூரியின் முதல்வர் Dr.A. கனகராஜ்  அவர்கள் தமது உரையில் கல்லூரியின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, புதுமையான கற்றல் முறைகள், கல்லூரி பெற்ற சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விருதுகள், மாணவர்களின் சாதனைகள், கல்லூரியின் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். முதலாமாண்டு மாணவ, மாணவியர் இக்கல்லூரியில் வழங்கப்படும் எண்ணற்ற வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்தி, தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று வாழ்த்தினார். கல்லூரியின் இயக்குனர் Dr. V. கார்த்திகேயன், சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், தங்களின் சிறப்பான அனுபவங்களை முதலாமாண்டு மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் 2500 மேற்பட்ட முதலாமாண்டு மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் கலந்து
கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: