தமிழகத்தில் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆணை வெளியிட்டு இரு மாதங்கள் கடந்தும் உற்பத்திக்கான நூல்களை வழங்காதததால் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் காத்திருப்பதாக விசைத்தறி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
தமிழகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள்,தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக நியாயவிலைக் கடைகள் மூலம் அரசின் இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது.இதற்காக ஆண்டுதோறும் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆணை வழங்கப்பட்டு வருகிறது.இதனை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் முறையாக 680கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆணை முன்கூட்டியே வழங்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான நூல்கள் உடனடியாக வழங்கப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இரு மாதங்கள் கடந்தும் இதுவரை இலவச வேட்டி சேலைக்கான உற்பத்திக்கான (பாவு,ஊடை)நூல்களை அரசு இதுவரை வழங்காதததால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழக்கும் சூழல் இருப்பதாக விசைத்தறி உரிமையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பாக தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.,
அப்போது பேசுகையில்...
அவர் கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி தூங்குவதற்கான அரசாணை காலதாமதமாக வந்ததால் கடந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் இலவச வேட்டி சாலை உற்பத்தியை முடிக்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் அரசு அதில் 32 லட்சம் சேவைகளும் 31 லட்சம் வேஷ்டிகளும் இருப்பு வைத்துக்கொண்டு இந்தாண்டு ஒரு கோடியே 77 லட்சம் வேஷ்டி சேலைகளில் கடந்த வருட இருப்பை தவிர்த்து இந்த ஆண்டு ஒரு கோடியே 42 லட்சம் வேஷ்டி மற்றும் சேலைகள் உற்பத்தி செய்வதற்காக இலக்கு நிர்ணயத்துள்ளது, மேலும் கைத்தறி மற்றும் பெடல் தரிகளுக்கான மொத்த ஆர்டரில் இருந்து கழிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது அரசு இந்த நடவடிக்கை மூலம் நெசவாளர்களுக்கு இரண்டு மாத கால இலவச வேட்டி சேலை உற்பத்தியில் வேலை வாய்ப்பு இல்லாத நிலை உருவாகும் என்பதால் அரசு ஒரு கோடியே 77லட்சம் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆணையும் உற்பத்திக்கான நூல்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக மாநிலத் தலைவர் எல்.கே.எம் சுரேஷ் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாநிலச் செயலாளர் இரா.வேலுமணி, மாநில பொருளாளர் கே.பாலசுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
0 coment rios: