திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கணபதிபாளையத்தில் தமிழ்நாடுசவரத்தொழிலாளர் சங்கத்தின் ஆலோசணைக்கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் தனியார் சலூன்களுக்கு கடைகளுக்கு கொடுக்கும் சலுகைகளை தமிழக அரசு நலிவடைந்த சவரத்தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்,சவரத்தொழிலாளர்களுக்கென நலவாரியம் அமைக்க வேண்டும் அதே போல் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள சவரத்தொழில் செய்யும் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் காக்க வேண்டும்,
மேலும் வீடு இல்லாதோருக்கு வீடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் லோகநாதன்,கிளை தலைவர் செல்வராஜ்,செயலாளர் மணிகண்டன்,
பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: