சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் துப்புரவு பணியாளர்கள் 250 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மகிழ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கே வி தங்கபாலு.
கல்வி கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாள் விழா மற்றும் மகாத்மா காந்தி சிலை அமைத்து ஐம்பதாவது ஆண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக 28, 48, மற்றும் 49 வது கோட்டங்களில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் 250 பேருக்கு வேஷ்டி சேலை மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் 2000 பேருக்கு நோட்டு புத்தகம் பேனா உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சேலம் அன்னதானப்பட்டி காந்தி சிலை அருகே நடைபெற்ற விழாவிற்கு சேலம் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர் தலைமை தாங்கினார். சேலம் மாநகர துணை மேயர் திருமதி சாரதா தேவி மாணிக்கம் மற்றும் சேலம் மாநகர காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் மிட்டாய் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டூர் முன்னிலை வகித்த விழாவில், முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவருமான கேவி தங்கபாலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு வேஷ்டி சேலை நோட்டு புத்தகங்களை வழங்கி மகேந்திரா. நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பச்சைப்பட்டி பழனிச்சாமி கோபி குமரன் 29 வது கோட்டை மாமன்ற உறுப்பினர் கிரிஜா குமரேசன் மொட்டையாண்டி சாந்தமூர்த்தி பர்வேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: