சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அன்னதானப்பட்டி ஸ்ரீ காவல் முனியப்பன் திருக்கோவில் ஆடி திருவிழா. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி அழைப்பு.
சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலைய குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காவல் முனியப்பன் திருக்கோவில் பதினெட்டாம் ஆண்டு ஆடித்திருவிழா கடந்த 16ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் முகூர்த்தக்கால் நடுக்களுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சக்தி விநாயகருக்கு ஸ்ரீ முனியப்பனுக்கு ஸ்ரீ செல்லியம்மனுக்கு ஸ்ரீ கன்னிமார் சுவாமிக்கு பூச்சாற்றுதல் விழாவும் அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான சக்தி அழைப்பு நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் இருந்து சக்தி அழைப்பு தொடங்கியது இதில் பெண்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தனர். அந்த பகுதியில் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற இந்த சக்தி அழைப்பு ஊர்வலமானது திருக்கோவிலில் நிறைவு பெற்றது. தொடர்ந்து பொங்கல் வைத்தல் வைபவம் அதனைத் தொடர்ந்து ஸ்ரீ காவல் முனியப்பனுக்கு மகா தீபாராதனையும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. சக்தி அழைப்பு விழாவில் அன்னதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முனியப்பனை வழிபட்டு சென்றனர். இதனை தொடர்ந்து நாளை ஸ்ரீ காவல் முனியப்பனுக்கு தெரிவிது விழா புறப்பாடு சதாபரணமும் தொடர்ந்து இருபத்திரண்டாம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவமும் மறுபூஜையும் நடைபெற்று விழா இனிதே நிறைவடைய உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் துரை என்கின்ற வெங்கடேஸ்வரன் சந்துரு பிரபு மணிமாறன் பாலசுப்பிரமணி சிங்காரம் புலித்தோர் சிறப்பாக செய்திருந்தனர்.

0 coment rios: