சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 87 ஆவது பிறந்தநாள் விழா. சேலத்தில் 87 இளைஞர்கள் இரத்தக்கொடை வழங்கி உற்சாகம்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 87 வது பிறந்தநாள் அந்த கட்சியினரால் இன்று ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் மாவட்ட பாமக சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சேலம் மாவட்ட பாமக இளைஞர் சங்கம் சார்பில் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு 87 இளைஞர்கள் ரத்தக்கொடை வழங்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற இரா அருள் மற்றும் மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம் ஒலி டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ரத்ததான முகாமினை துவக்கி வைத்தனர். முகாமில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 87 இளைஞர்கள் தங்களது குருதியை சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு தானமாக கொடுத்து விழாவை சிறப்பித்தனர். இதேபோன்று மாலை சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மிகப்பெரிய அளவிலான கேக் வெட்டி நோயாளிகளின் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

0 coment rios: