சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
டெண்டர் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக கவுன்சிலர்கள் சேலம் மாநகராட்சி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு..
சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் திருமதி சாரதா தேவி மாணிக்கம் மற்றும் ஆணையாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இயல்பு கூட்டத்தில், 60 கோட்டங்களை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் தங்களது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பிரச்சினைகளில் குறித்து பேசிக் கொண்டிருந்த போது, ஒன்பதாவது கோட்டை திமுக மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போன்ற கூட்டத்தில் மாற்றுக் கட்சியைச் சார்ந்த ஐடி விங் உறுப்பினர் ஒருவர் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை படம் பிடித்து தவறான செய்தி வெளிப்படுத்துவதாகவும், அவரைக் கண்டறிந்து உடனடியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மேயர், துணை மேயர் மற்றும் ஆணையாளர் இளங்கோவன் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி மற்றும் மாமன்ற உறுப்பினர் செல்வராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நடைபெற்றுக் கொண்டிருந்த மாமன்ற இயல்பு கூட்டத்தில் கடுமையான பரபரப்பு காணப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிமுக கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். குறிப்பாக, வ உ சி பூ மார்க்கெட் டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதனால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ரூபாய் 8 கோடி இழப்புரூபாய் எட்டு கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டிய அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி ஒப்பந்ததாரர் அதிகாரிகள் செய்யும் ஊழலில் மேயருக்கும் பங்குள்ளதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த சம்பந்தப்பட்ட சேலம் மாநகராட்சி அதிகாரிகளால் பதில் ஏதும் கூற முடியாமல் பரிதவித்த சம்பவமும் சேலம் மாநகராட்சி இயல்பு கூட்டத்தில் நடந்தேறியது. இதேபோல் அதிமுக வார்டுகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாகவும், ஊரகப்பகுதியில் உள்ள நச்சுக்கழிவுகளை மாநகராட்சி எல்லைக்குள் கொட்ட அனுமதி வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்தும் அதிமுக கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

0 coment rios: