சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாநகராட்சியின் இயல்பு கூட்ட நிகழ்வுகளை ரகசியமாக படம் பிடித்து தவறான செய்தி வெளிப்படுத்தும் அதிமுகவை சார்ந்த ஐடி விங் நிர்வாகிகள். இதற்கு திமுக மாமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சேலம் மாநகராட்சியில் கடுமையான பரபரப்பு.
சேலம் மாநகராட்சியின் இயல்பு கூட்டம் மாநகர மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. துணைமேயர் திருமதி சாரதாதேவி மாணிக்கம் மற்றும் ஆணையாளர் இளங்கோவன் முன்னிலை வகித்த இயல்பு கூட்டத்தில், 60 கோட்டங்களைச் சார்ந்த மாமன்ற உறுப்பினர்கள் தங்களது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி மக்களின் பிரச்சனைகளை குறித்து பேசினர். அப்பொழுது குறுக்கிட்ட சேலம் மாநகராட்சியின் 9 வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான நெய்வலிங்கம், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சேலம் மாநகராட்சி இயல்பு கூட்டத்தில் மாற்றுக் கட்சியைச் சார்ந்த ஐடி விங் நிர்வாகிகள் சிலர் கலந்து கொண்டு இங்கு நடக்கும் நிகழ்வுகளை படம் பிடித்து தவறான செய்தியை மக்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்றும் அவர்களை இந்த கூட்டத்தில் இருந்து உடனடியாக கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் என்று மாநகர மேயர் துணை மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தார். சேலம் மாநகராட்சி பொருத்த வரை ஆளும் கட்சி திமுக, எதிர்க்கட்சி அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் சுயேட்சை வேட்பாளரும் சேலம் மாநகராட்சியில் இருக்கின்றனர்
அப்படி இருக்கும் பட்சத்தில், ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சியான அதிமுக ஐடி விங் நபர்கள் தான் என்று திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் குற்றம் சுமத்தினார். அப்பொழுது குறுக்கிட்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்தின் குற்றச்சாட்டிற்கு வாதத்தில் ஈடுபட்டதால் நடைபெற்றுக் கொண்டிருந்த இயல்பு கூட்டத்தில் கடுமையான பரபரப்பு நிலவியது.

0 coment rios: