சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
பாமக மாணவர் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா. கோவில்களில் சிறப்பு பூஜை மேற்கொண்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 87 ஆவது பிறந்தநாள் விழா,பசுமை தாயகத்தின் மாநிலத் தலைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்களின் பிறந்தநாள் விழா, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணம் வெற்றி பெறவும் வேண்டி முப்பெரும் விழாவானது பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர் சங்கத்தின் சார்பில் மாநில மாணவர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் விஜயராசா தலைமையில் சேலம் உடையப்பட்டியில் நடைபெற்றது.மாநில சட்டக் கல்லூரி பிரிவு செயலாளர்கள் மோகன்ராஜ், கோகுல கண்ணன்,வீரபாண்டி நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்டக் கல்வி பிரிவு மாவட்ட அமைப்பாளர் பெரம்பலூர் பாலகிஷோர், மாநில பொதுக்குழு உறுப்பினர் குமாரசாமி, காட்டூர் கவியரசு, சங்க மாவட்ட நிர்வாகிகள் வீரபாண்டி யுவராஜ், பெரம்பலூர் பாலகிஷோர்,தர்மபுரி ஹரி சுதன்,மேச்சேரி ரகு,தர்மபுரி நிஷாந்த், சஞ்சய், ஆட்டையாம்பட்டி யுவ பிரசாந்த், பூபதி, தர்ஷன், ஆட்டையாம்பட்டி பூபதி, நாமகிரிப்பேட்டை கண்ணன், கனகராஜ், வசந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேற்கண்ட நிகழ்ச்சியில் உடையாபட்டி ஓம் ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜையும். ,பொதுமக்களுக்கு இணைப்புகள் வழங்கியும், ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



0 coment rios: