சேலம்.
S.K. சுரேஷ்பாபு 
தமிழக முதலமைச்சராக விரைவில் தொல் திருமாவளவன் அலங்கரிப்பார் என ஒவ்வொரு சிறுத்தைகளும் மனதில் உறுதி ஏற்க வேண்டும்.  வரலாற்றிலேயே முதன்முறையாக சேலத்தில் பகலில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட விசிக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில துணை பொது செயலாளர் கலியமுதன் எழுச்சி உரை.
சேலம்  மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது. இந்த  கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் காஜாமைதீன், மொழியரசு, மெய்யழகன், கருப்பையா, தெய்வானை, தமிழன் ஆகியோர் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர்கள் இமயவர்மன், ஆறுமுகம், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர்கள் சசிகுமார், ராமன் ஆகியோர் வரவேற்பு பேசினார். இதில் மாநில துணைப் பொதுச் செயலாளர் களியமுதன், முன்னாள் மண்டல செயலாளர் நாவரசன், ஜெயசந்திரன் ஆகியோர் வக்பு திருத்தச் சட்டம் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.தேசிய மக்கள் தொகை பதிவேடு தேசியக் குடிமக்கள் பேரோடு ஆகியன தயாரிப்பதை கைவிட வேண்டும் மதவாத வன்முறை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஜம்மு காஷ்மீர் மீண்டும் மாநிலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்களை தீர்மானம் விளக்கி பேசினர்.
வரலாற்றிலேயே முதன் முறையாக பட்டப்பகலில் நடைபெற்ற சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட விசிக கூட்டத்தில் பேசிய கலியமுதன், அரசியல் கட்சிகளின் பொதுவான கோட்பாடுகளை தகர்த்தெறியும் ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் மட்டுமே என்று குறிப்பிட்டார் அவர், வழக்கமாக பொதுக்கூட்டங்கள் என்பது மாலை பொழுதில் மட்டுமே நடைபெற்று வந்த மற்றும் நடைபெற்று வரும் நிலையில் மாறாக பட்டப்பகலில் ஒரு கட்சியின் பொதுக்கூட்டம் நடத்திய பெருமை சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட விசிக கட்சிக்கு மட்டுமே சாரும் என்றும்,  இதேபோன்று தமிழக அரசின் முதலமைச்சர் ஆக தலைவர் திருமாவளவன் அலங்கரிப்பார் என்று கூறும் கூற்றினை தகர்த்தெறிந்து மிக விரைவில் தமிழக முதலமைச்சராக தொல் திருமாவளவன் அமருவார் என்ற ஒவ்வொரு உறுதியினை னையும், ஒவ்வொரு சிறுத்தைகளும் தங்களது மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். நமது இலக்கு 2026 அல்ல 2031-ல் நிச்சயம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் தமிழக அரசு அமையும் என்பதை உறுதிப்படக் கூடிய அவர், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகளை கடுமையாக விமர்சித்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள், அதிமுக கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறிய போது அவர் கூறிய கருத்து தம்பி தொல் திருமாவளவன் நன்றாக இருக்க வேண்டும் அவர் கூட்டணி குறித்து அவசர முடிவு எடுத்திருக்கக் கூடாது என்று மட்டுமே குறிப்பிட்டதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பெருமைப்பட பேசினார் கலியமுதன். தொடர்ந்து மத்திய அரசை பலவாறு விமர்சித்து பேசிய அவர் புராண காலங்களில் இலங்கையை ஆஞ்சநேயரால் எரிக்கப்பட்டது என்றும் தற்பொழுது இந்திய திருநாட்டை விரைவில் மோடி  எரித்து விடுவார் என்றும் குற்றம் சாட்டினார்.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோர் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக துணை பொது செயலாளர் முன்னிலையில் தங்களை விடுதலை சிறுத்தைகளாக இணைத்துக் கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் விசிக வட்ட, மாநில தொகுதி, நிர்வாகிகள்  ஒன்றிய, நகராட்சி செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர்கள் சாமுராய் குரு, அறிவழகன் ஆகியோர் நன்றி கூறினர்.
 by
 by 
0 coment rios: