சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பதற்கு உதாரணமாக சேவையாற்றி வரும் வழக்கறிஞர் தெய்வா.
சமூக சேவையில் தனக்கு நிகர் தானே என்பதை மெய்ப்பிக்கும் வகையில் நாள்தோறும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருபவர் சேலம் ஒன்பதாவது கோட்டு திமுக மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞரும் சிறந்த சமூக சேவகர்மான வழக்கறிஞர் தெய்வலிங்கம். தெய்வா அறக்கட்டளையின் சார்பில் நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட ஏழை எளிய மற்றும் முதியவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி, அமரர் உறுதி சேவை மற்றும் தாமாக முன்வந்து ஆதரவற்ற சகலங்களை அவர்களது குல வழக்கப்படி அடக்கம் செய்வது என்பது போன்ற இவரது செயல்பாடுகள் அதிகம் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் 36 ஆவது கோட்டை மேலூர் நகர் பகுதியை சேர்ந்த மோனிகா என்ற மாணவி கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் அவதிப்படுவது குறித்து தகவல் அறிந்த தெய்வா அறக்கட்டளையின் நிறுவனர் வழக்கறிஞர் தெய்வம் இன்று சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து தெய்வா அறக்கட்டளை நிறுவனம் அருகே சம்பந்தப்பட்ட மாணவிக்கான கல்லூரி கட்டணத்தை கொடுத்து உதவி மகிழ்ந்தார் தெய்வா. உதவித்தொகையை பெற்றுக் கொண்ட மாணவி மோனிகா மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கறிஞர் தெய்வலிங்கத்தின் செயல்பாட்டிற்கு தங்களது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். உடன் அறக்கட்டளை நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.

0 coment rios: