தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இரா.வேலுச்சாமி கூறியதாவது...
1000 யூனிட் இலவச மின்சாரத்தை வழங்கி விசைத்தறியாளர்களின் மின் சுமையை குறைத்துக் கொடுத்ததோடு, இந்த ஜூலை மாதத்தில் உயர்த்தப்பட்ட 3.16 சதவீத மின் கட்டண உயர்வை அரசே ஏற்றுக்கொண்டு விசைத்தறியாளர்களின் நலனுக்காகவும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்காகவும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்திலிருந்து விலக்கு அளித்ததற்கு, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், பரிந்துரைத்த, அமைச்சர் அனைத்து அமைச்சர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்,
மேலும் விலை இல்லா வேஷ்டி சேலை ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதற்காக, 680 கோடி ரூபாயை ஒதுக்கி, விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமும் வழங்குவதோடு விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்காக, 30 கோடி ரூபாயும், பொது பயன்பாட்டு மையத்திற்கு 20 கோடி ரூபாயை ஒதுக்கி விசைத்தறியாளர்களின் நலனுக்காக பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுப்பதை போல, விசைத்தறிகளுக்கு தேவையான மின் உற்பத்தியை, விசைத்தறிக்கூடங்களிலே உற்பத்தி செய்வதற்கு, நெட் மீட்டர் வசதியுடன் கூடிய 50% மானியத்துடன், சோலார் பேனல் அமைப்பதற்கு, திட்டத்தை வகுத்து, நடைமுறைப்படுத்தி கொடுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
0 coment rios: