கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது..!
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி வயிற்று வழி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். அப்போது பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுமுடி போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர் மூலம் கர்ப்பமானதாக முதலில் அந்த கல்லூரி மாணவி தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் கல்லூரி மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் செல்போனை ஆய்வு செய்தபோது, அவர் கூறிய தகவல் பொய் என்பது தெரியவந்தது.
பின்னர் மாணவியிடம் நடத்திய தீவிர விசாரணையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டி வரும் இந்திரஜித் (25) என்ற நபருடன் பழகி கர்ப்பமானது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இந்திரஜித்தை கொடுமுடி போலீசார் போக்சோ வழக்கு பதிந்து நேற்று கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். கைதான இந்திரஜித்திற்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: