நம்பியூர் அருகே அழகாபுரி, பொலவபாளையம், காந்திபுரம் மேடு ஆகிய பகுதிகளில் வெறி நாய்கள் கடித்ததில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானதால் விவசாயிகளும் பொதுமக்களும் சோகம்
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே காந்திபுரம் மேடு, ஓம்சக்தி கோவில் வீதி, அழகாபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜமால், ஈஸ்வரமூர்த்தி, ரங்கநாதன், சாதிக் அலி ஆகியோருக்கு சொந்தமான அப்பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்
இவர்களுக்கு சொந்தமாக 15 க்கு மேற்பட்ட ஆடுகள் உள்ளது தினமும் வீட்டின் பின்பகுதியில் கட்டி வைத்து பின்பு மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு ஆடுகளை அழைத்துச் சென்று மேச்சலில் ஈடுபடுத்தி பின்பு வீடு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக தனது வீட்டின் அருகில் இருக்கும் காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று மேச்சலில் ஈடுபட்டு வந்தார் அப்பொழுது அப்பகுதிக்கு 10 மேற்பட்ட வெறிநாய்கள் அவ்வழியாக வந்துள்ளது.
ஆடுகளை கண்ட வெறிநாய்கள் சுற்றிவர துரத்தி துரத்தி கடித்து தாக்கி உள்ளது இதில் சம்பவ இடத்திலேயே 10 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகிது மேலும் 5 ஆடுகள் கவலைக்கிடமான நிலைமையில் உள்ளது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறிய போது கடந்த ஒரு வருடமாகவே இந்த வெறிநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
இது குறித்து நாங்கள் பல்வேறு இடங்களில் வெறி நாய்களை கட்டுப்படுத்த புகார் கொடுத்தும் நம்பியூர் பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை
கடந்த ஒரு வருடத்தில் எங்கள் பகுதிகளிலேயே பல்வேறு இடங்களில் இதுபோல் நடந்துள்ளது இன்று பட்டப்பகலிலேயே வெறிநாய்கள் ஆடுகளை கடித்து கொன்று உள்ளது.
இந்த வெறி நாய்கள் கட்டுபடுத்துவது குறித்து உள்ளாட்சி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக் கொண்டார்
0 coment rios: