ஊராட்சி மன்றம் முதல் பாராளுமன்றம் வரை இஸ்லாமிய சமூகத்திற்கு பிரதி நிதித்துவத்தை உறுதி செய் வக்பு வாரிய திருத்தச் சட் டத்தை ரத்து செய் எனும் இரட்டை கோரிக்கைகள் வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி வருகின்ற ஜூலை 6ல் மாநில தலை வர் பேராசிரியர் வி.பி. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலைமையில் மாபெரும் பேரணி மற்றும் மாநாடு மதுரையில் நடத்துகிறது என கட்சியின் மாவட்ட தலைவர் ஏ. சித்தீக் தெரிவித்துள்ளார் ...
சபா நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில் ...
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், இந்தியாவில் முஸ்லீம் மக்களுக்கு சட்டம் இயற்றும் அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதேயாகும்,
இந்நாட்டின் மன்றத்தில் பாராளு மொத்தமாக 543 உறுப்பினர்கள் உள்ள நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் குறைந்தபட்சம் 80 முஸ்லீம் எம்.பிக்கள் இருக்க வேண்டும், ஆனால், தற்போது சுமாராக 24 பேர் மட்டுமே இருக்கிறார்கள். அதேபோல், ராஜ்ய சபாவில் 35 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 13 பேர் மட்டுமே உள்ளனர்,
தமிழக சட்டமன்றத்தில் மட்டும் 14 முஸ்லீம் எம்.எல்.ஏக் கள் இருக்க வேண்டிய நிலை இருப்பினும், தற்போது அதில் பாதிக்கும் குறைவான 7 பேர்தான் உள்ளனர், இந்தியா முழுவதும் 4,123 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், முஸ்லீம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 296 மட்டுமே என்பது கவலைக்கிடமானது.
தமிழகத்தில் மட்டும் 7 சதவீத முஸ்லீம் மக்கள் வசிக்கிறோம், ஆனால், அந்த மக்கள் தொகைக்கு ஏற்ப நமக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை, இது ஒரு சமூக நீதிக்கே எதிரானது.
இந்த உண்மைகளை எடுத்துச் சொல்லவும், அரசியலில் முஸ்லீம் மக்களின் உரிய இடத்தை கோரிக்கையாக முன்வைக்கவும், நமது இந்த மாநாட்டை நடத்துகிறோம் என்றார்.
0 coment rios: