சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலம் கிச்சிபாளையத்தில் துவக்கப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரைவில் மகப்பேறு மருத்து வார்டு துவக்கப்படும். 44வது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இமயவரம்பன் பெருமிதம்.
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழக முழுவதும் 208 நகர்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையம் தமிழக முதலமைச்சரால் காணொளி காட்சி வாயிலாக திறந்துவைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி 44வது கோட்டத்திற்கு உட்பட்ட கிச்சிபாளையம் கரீம் காம்பவுண்ட் அருகே சுமார் 30 லட்சம் மதிப்பிலான நகர்ப்புற நலவாழ்வு மையத்தினை தமிழக முதலமைச்சர் யார் திறந்து வைக்கப்பட்டது. இதனை வரவேற்கும் விதமாக மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் 44 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்காக அர்ப்பணித்தனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததை பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
நிகழ்வில் பேசிய மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இமயவரம்பன், இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் 60 ஆண்டுகால கோரிக்கை மற்றும் போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்ட இமயவரம்பன், தான் 44-வது கோட்டை மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் சேலம் மாநகர மேயர் ஆகியோரை அணுகி மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதி என்பதால் இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டுமென்ற கோரிக்கையை விடுத்ததாகவும் அதன் அடிப்படையில் அதற்கான நிதி ஒதுக்கி அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு இந்த இடத்தில் அதற்கான பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு தற்பொழுது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறந்ததற்கு தமிழக முதலமைச்சர் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கும் முதற்கண் தன் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக விழாவில் தெரிவித்தார். மேலும் சேலம் மாநகராட்சி பகுதிகளிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதி உச்சிபாளையம் என்பதால் அரசு மருத்துவர்கள் ஏற்கனவே பணி செய்யும் காலகட்டத்திற்கு பதிலாக கூடுதலாக காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பணியாற்றவும் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் இங்கு 24 மணி நேரமும் சேலம் மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்பாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் எப்பொழுதும் இருக்கும் என்று தெரிவித்த இமயவரம்பன் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியும் இயந்திரங்கள் உட்பட ஆரம்ப கால நோய்கள் அனைத்திற்கும் முதல் உதவி சிகிச்சை வழங்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரிய அளவிலான மகப்பேறு மருத்துவ வாழும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பெருமைப்பட தெரிகின்றார்.
இந்நிகழ்வில், அந்த பகுதியில் முக்கிய பிரமுகர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
0 coment rios: