S.K. சுரேஷ்பாபு.
இறைதூதர் பேரன்களின் தியாகத்தை போற்றும் வகையில், சேலத்தில் இஸ்லாமியர்கள் புலி நடனமாடி நேர்த்திக்கடன்.
இஸ்லாமியர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மொஹரம் திருநாள் உலக இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இறைதூதர் நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹசேன் மற்றும் உசேன் கொல்லப்பட்டதை நினைவு கூறும் விதமாகவும், அவர்களது தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படும் இந்த திருநாளையொட்டி சேலத்தில் இஸ்லாமியர்களால் மிரட்சியுடன் கடைபிடிக்கப்பட்டது. தியாகத் திருநாளாக கருதப்படும் இந்த மொகரம் விழாவையொட்டி சேலம் கோட்டை சுன்னத் ஜமாத் சார்பில் புலி ஆட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் சேலத்தில் கலைக்கட்டும் இவ்விழாவானது கோட்டை பகுதியில் உள்ள ஃபிரண்ட்ஸ் மஹாலில் துவங்கிய இந்த புலி ஆட்ட நிகழ்வில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புலிடமிட்டு மேளதாள இசைக்கு ஏற்றவாறு புலி நடனமாடி இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பேரர்கள் தியாகத்தை போற்றினர்.
கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த புலி நடன ஊர்வலமானது இறுதியில் ஃபிரண்ட்ஸ் மஹாலில் நிறைவு பெற்றது. சேலம் கோட்டை சுன்னத் ஜமாத் தலைவர் காதர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிர்வாகிகள் பண்டு அஜித் அலி குட்டி புலி அசின் ஷாபிர் சேட்டு பாபு சவுகத் அலி யூசுப் கான் பாஷா, நசீம் ஆரிப் ஆசிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இதனை அடுத்து சேலம் கோட்டை சுன்னத் ஜமாத் சார்பில் பிற்பகல் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.
0 coment rios: