சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன் விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு விழா.
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொன் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவினை முன்னின்று நடத்தி ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கு பாராட்டி கௌரவிக்கும் விழா சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. SDCBA சங்கத்தின் தலைவர் ஜெ.மு.இமயவரம்பன் தலைமையில் நன்றி தெரிவிக்கும் விழாவில், பார் கவுன்சில் கோ சேர்மன் சரவணன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு நினைவுப்பரிச, பொன் விழா நினைவுப்பரிசு மற்றும் பொன் விழா நிகழ்வுகளுடன் தற்போது அச்சிடப்பட்டுள்ள பொன் விழா மலரும் வழங்கப்பட்டது. தொடர்ந்து குழு புகைப்படமும் பாராட்டு விழாவின்போது எடுத்துக் கொள்ளப்பட்டது. விழாவில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள் உட்பட, சங்கத்தின் செயலாளர் முருகன் மற்றும் பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

0 coment rios: