சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்பு.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி மற்றும் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் சார்ந்து இருந்த அதிமுக பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்களின் தலைமையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்ட 300-க்கும் மேற்பட்டவர்களுக்கும் கட்சி துண்டுகளை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன். மேலும் நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் பேசும்போது, பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்து கொண்ட அனைவருக்கும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதோடு திமுகவில் இணைத்து கொண்ட தங்களுக்கு சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

0 coment rios: