சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் குறைகளை கேட்டறிந்தார்.
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உட்பட்ட கோட்டக் கவுண்டம்பட்டி ஊராட்சி பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் அவர்களிடம், ஹவுசிங் போர்டு, வசந்தம் நகர் பகுதிகளுக்கு சென்றபோது அந்த பகுதி மக்கள் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் சாலைகள் மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளதாகவும் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக பணிக்கு செல்லும் வாகனங்கள் பள்ளி கல்லூரி வாகனங்கள் செல்ல இயலாத நிலை உள்ளதாகவும் இதனை சரி செய்து தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் அவர்கள் விரைந்து சரி செய்து கொடுக்கிறேன் என்று உறுதி அளித்தார். பின்னர் செல்லப்பிள்ளை குட்டை ஊராட்சி சேலம் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒப்பாண்டியூர் வழியாக பெரமச்சூர் பாலம் வரை செல்லும் சாலை மிகவும் பழுந்தடைந்துள்ளதாகவும் இதற்கு மாற்றாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். பின்னர் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி கரிசல்பட்டி பேருந்து நிறுத்தம் முதல் தொடக்கக்கன் காடு முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி எல்லை வரை கரையோரம் தடுப்பு சுவர் அமைத்து புதிய தார் சாலை அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வுகளில் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராஜா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடாஜலம் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் குணசேகரன் சக்தி சுகவன் கரிசல்குணா வெங்கடபதி பிரகாஷ் விக்னேஷ் செந்தில் அழகு மாத எண் கிளைச் செயலாளர் கோவிந்தராஜ் பழனிச்சாமி மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

0 coment rios: