சேலம். 
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். 
தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்  கடந்த 15 ஆம் தேதி துவக்கி வைத்தார். இதனை அடுத்து தமிழக முழுவதும் மாவட்டங்கள் தோறும் முகங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதிக்கு உட்பட்ட மக்களுக்கான  சிறப்பு முகாம் அமானி கொண்டலாம்பட்டி அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமினை சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் குத்துவிளக்கேற்றி  துவக்கி வைத்தனர். முகாமில் 
சேலம் தெற்கு வட்டாட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள்  உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படக்கூடிய உதவி திட்டங்களுக்கான விண்ணப்பங்களை பெற்று ஆர்வத்துடன் பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் கொடுத்தனர். இதில் அதிகப்படியாக மாதாந்திர மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களே  அதிக அளவில்  விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், அந்த விண்ணப்பங்களை பெறும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூர்த்தி செய்து வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த முகாமில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இருந்தாலுமே கூட அந்த பகுதியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் சீருடையுடன் அந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கான தேவைகளில் மனுக்களாக வழங்கியதுடன், சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் அவர்களுடன் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டனர். பின்னர் பொதுமக்களின் மனுக்களுக்கு 40 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டதை நினைவுபடுத்தியவர் பொதுமக்களில் மனுக்களைப் போல துப்புரவு தொழிலாளர்கள் மனுக்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு சம்பந்தப்பட்ட உதவி கிடைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த சிறப்பு முகாமில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
 by
 by 
0 coment rios: