சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் புனரமைக்கப்பட்ட அல்லிக்குட்டை ஏரியை பார்வையிட்ட CBE மற்றும் SLM மாநகராட்சி ஆணையாளர்கள்,
சேலம் மாநகராட்சியின் 9 வது கோட்டத்திற்கு உட்பட்ட அல்லிக்குட்டை ஏரி ஒரு காலகட்டத்தில் பராமரிப்பு இன்றி மிகவும் துர்நாற்றம் வீசி அந்த பகுதி மக்களுக்கு பெரும் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தியிருந்தது. இதனைப் போக்க சேலம் மாநகராட்சியின் 9 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் சேலம் மாநகராட்சி மேயர் ஆகியோரிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து  மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக புனரமைக்கப்பட்டு சமீபத்தில் தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக பொது மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட மிகச் சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வரும் அல்லிகுட்டை ஏரியினை இன்று பார்வையிட்டனர். அப்போது சேலம் மாநகராட்சியின் 9 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் உட்பட இரண்டு மாநகராட்சி அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.
 by
 by 
0 coment rios: