சேலம். 
S.K.சுரேஷ்பாபு.
தனது கோட்டத்தை சார்ந்தவரின் வீட்டில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு. லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம். 
60 கோட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சியின் ஒன்பதாவது கோட்டத்திற்கு உட்பட்ட அல்லிகுட்டை வீராணம் பிரதான சாலையில் உள்ள ஒருவரது வீட்டில் கொடிய விஷம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்து விட்டதாக 9 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி சென்று தன்னால் இயன்றதை செய்து வரும் மாமன்ற உறுப்பினர்,  இதுகுறித்து தகவல் அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று பாம்பு பிடிப்பவர்களின் உதவி இல்லாமல் வீட்டிற்குள் புகுந்த ஐந்தரை அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட  கொம்பேறி மூக்கன் பாம்பினை உயிருடன் லாவகமாக பிடித்தார். பிடிபட்ட பாம்பினை ஒரு சாக்கு பையில் செலுத்தி அதனை அடர்ந்த வனப்பகுதியில் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் மற்றும் அவரது நண்பர்களால் கொண்டு சென்று விடப்பட்டது. இதனை எடுத்து சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்திற்கு தங்களது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். இது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல.
 by
 by 
0 coment rios: