சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி 1000ற்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே வேங்காம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் சுரங்கபாதை அமைத்து தர வலியுறுத்தி, மல்லூர் பேரூராட்சி துணை தலைவர் அய்யனார் தலைமையில் சுற்றியுள்ள கிராம மக்கள் 1000க்கும் மேற்பட்டோர் மல்லூர் ரயில் நிலையத்தை முற்றுகைட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் 
அவர்களிடம்கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலகுமார் தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கோரிக்கை பாதாகைகளை ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்த போராட்டத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மல்லூர் ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது வேங்காம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் சுரங்கபாதை அமைக்காவிட்டால், இனி ரயில்களை இப்பகுதி வழியாக ரயில் பாதையில் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மத்திய மாநில அரசு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது ஒரு வார காலத்திற்குள் தங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். மேலும் மத்திய மாநில அரசுத்துறை அதிகாரிகள் கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கிராம மக்களை ஒன்று திரட்டி ரயில்வே கேட் முன்பு மிகப்பெரிய அளவிலான மறியல் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் ஊர்மக்கள் சார்பில் மல்லூர் பேரூராட்சி தலைவர் வேங்கை அய்யனார் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு மேலும் அதிகரித்தது. 
 by
 by 
0 coment rios: