சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஆடி முதல் நாளையொட்டி சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு.....ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்..
தமிழ் மாதங்களில் வரும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.இதனையொட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலையங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடைபெறும் ஆடிபெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மாதத்தில் ஆடி-1, ஆடி-18, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி என அடுத்தடுத்து விஷேசங்கள் வரும். இதுபோன்ற நாட்களில் கோவில்களில் விஷேச பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று ஆடி-1 என்பதால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆளையங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குறிப்பாக சேலத்தில் உள்ள 8 பட்டிகளுக்கும் காவல் தெய்வமாக விளங்கி வரும், சேலத்தில் பிரசித்திபெற்ற காவல் தெய்வமாக விளங்கி வரும் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில், இன்று காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அம்மனுக்கு உகந்த மாதம் என்ற ஐதீகம் உள்ளதால் இன்று காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபாட்டு சென்றனர். வரும் 22-ம் தேதி அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் ஆடிபெருவிழா தொடங்க உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
0 coment rios: