சேலம்,
S.K.சுரேஷ்பாபு.
ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா கோலாகல கொண்டாட்டம். திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் குடும்பத்தாருடன் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்.
ஆடி மாதம் முதல் நாளையொட்டி, தேங்காய் சுடும் திருவிழா சேலம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. அதற்மத்துக்கும், தற்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் முதல் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ‘‘ஆடி- 18 அன்று முடிவுக்கு வந்தது. இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி முதல் நாள் மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள்.இதுபோல் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது. ஆண்டாண்டு காலமாக அந்த பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் ஆடி மாதப் பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் சேலம் மாநகராட்சியின் ஒன்பதாவது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் சிறந்த சமூக சேவகருமான தெய்வலிங்கம் பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களுடன் தேங்காய் சுட்டு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
இதேபோல அரிசிபாளையம், கோட்டை அண்ணா நகர், அம்மாபேட்டை,சாமிநாத புரம், கிச்சிபாளையம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று தேங்காய் சுடும் பண்டிகை சிறுவர், சிறுமிகளின் உற்சாகத்துடன் வீடுகள் தோறும் கொண்டாடப்பட்டது. துளையிட்ட தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை இட்டு, நீண்ட ஒரு முனை கூராக சீவப்பட்ட அழிஞ்சி மர குச்சியில் அந்த தேங்காயை சொருகுவார்கள். பின்னர் அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை மூடுவர். அதைத் தொடர்ந்து வீட்டு வாசலில் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி,அந்த நெருப்பில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி சுடுவர். ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் தேங்காய் சுடப்பட்டபின் அதை அருகில் உள்ள பிள்ளையார் கோவில்களுக்கு எடுத்துச்சென்று வழிபடுவதும், பின்னர் தேங்காயை வீட்டிற்கு எடுத்துவந்து, அதை உடைத்து உள்ளே இருந்த கலவை உணவை உற்றார், உறவினர்களுடன் உண்டு மகிழ்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. சிலர் வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு முன்பு படைத்து, பூஜைகள் செய்துவிட்டு சாப்பிடுவார்கள்.
இப்படி நெருப்பில் பக்குவப்பட்ட தேங்காயும் அதனுள்ளே இருக்கும் பூரணமும் மிகவும் சுவையாக இருக்கும். ருசி பார்த்தவர்கள் இதனை உணர்வார்கள்.
0 coment rios: