சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தீரன் சின்னமலை 220 வது நினைவு தினம். கொங்கு மண்டலம் நாடு மக்கள் தேசிய கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.
சிவன்மலை சென்னிமலைக்கும் இடையே சின்னமலை அபகரித்துக் கொண்டான் எனக் கூறி ஆங்கிலேயர்களிடமிருந்த வரிப்பணத்தை ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டான் என ஆங்கிலேயரிடம் கொக்கரித்த இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையை ஈரோடு மாவட்டம் ஓடா நிலையில் ஆங்கிலேயர்கள் ஆடி 18 நாள் அன்று தூக்கிலிட்டனர். ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தீரன் சின்னமலை அவரது 220 வது நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் சார்பில் சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே அவரது திருவுருவப்படம் வைத்து பல்வேறு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் லோகநாதன் மாலை அணிவித்து மரியாதை மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மத்திய மாவட்ட செயலாளர் ரத்தினவேல் மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு அவரது புகழ் குறித்து பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். இந்த நிகழ்வில் மாநகர இளைஞரணி துணை தலைவர் தாமரைச்செல்வன் மண்டல மாணவர் அணி செயலாளர் மோகன் மண்டல நிர்வாகிகள் கனிஷ்கர் குமார் மணி மண்டல இணை செயலாளர் மதிவாணன் தாமரைக்கண்ணன் துணை செயலாளர் கௌதம் கண்ணன் மோகன் குமார் வீரபாண்டி கிரி கௌரிசங்கர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் பாலம்பட்டி ராஜாஜி பாலிடெக்னிக் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தீரன் சின்னமலையை போற்றும் விதமாக அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

0 coment rios: