சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
11 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவையொட்டி 50க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன்.
சேலம் லைன்மேடு ஸ்ரீ புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் திருக்கோவில் 11 ஆம் ஆண்டு ஆடிப்பெருவிழா முகூர்த்த காலில் நடுதலுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை அடுத்து அமலுக்கு பூச்சாட்டுகள் கம்பம் நடுதல் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன. ஆடி 18 ஆம் நாளான இன்று ஸ்ரீ புன்னைநல்லூர் முத்துமாரியம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கோவிலின் தலைவர் வழக்கறிஞர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து அந்த பகுதிகளின் முக்கிய வீதிகளின் வழியாக வளம் வந்து பின்னர் கொண்டு வந்த பாலை அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்று மகாதீப ஆராதனையும் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருக்கோவிலின் சார்பில் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவிலில் செயலாளர் பழனி காலி விஸ்வநாதன் உள்ளிட்டோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

0 coment rios: