சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஆடி 18 தினத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நீர்மோர் மற்றும் கம்மங்கூழ் வழங்கி மகிழ்ந்த சொர்ணாம்பிகை நிறுவன குழுமத்தார்.
தமிழ் மாதங்களில் வரும் ஆடி மாதத்திற்கும் புராண நிகழ்வான மகாபாரதத்திற்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு என்பது யாராலும் மறுக்கவோ மறந்திடவும் முடியாது. அந்த வகையில் ஆடி 18 தினத்தன்று நீர் நிலைகளில் புதுமண தம்பதிகள் காளி மாற்றி சிறப்பு பூஜைகள் மேற்கொள்வதும் பொதுமக்கள் தங்களது மூதாதையருக்கு திதி கொடுத்து வழிபடுவதும் வழக்கமான ஒன்றாகவே உள்ளது அதன் அடிப்படையில், சேலம் மாவட்டத்தில் மேட்டூர் உட்பட அனைத்து நீர் நிலைகளிலும் இன்று மக்கள் வெள்ளம் அலை மோதியதை கண்கூடாக காண முடிந்தது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரம் மாமாங்கம் ஊத்திக்கிணறு முனியப்பன் திருக்கோவிலில் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் உள்ள பல்வேறு திருக்கோவில்களின் சம்பந்தப்பட்ட கடவுள்களால் பட்டு வரும் ஆயுதங்கள் அனைத்தும் இந்த ஒரு நாளில் சம்பந்தப்பட்ட ஊருக்கு கிணறு முனியப்பன் கோவிலுக்கு கொண்டு வந்து அதனை சுத்தம் செய்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு மீண்டும் ஊர்வலமாக சம்பந்தப்பட்ட கோவிலுக்கு கொண்டு செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆடி 18 நாளான இந்த ஒரு தினத்தில் மட்டும் சம்பந்தப்பட்ட ஊற்று கிணறு முனியப்பன் திருக்கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக சேலத்தில் பிரபல தொழில் நிறுவனமான ஸ்வர்ணாம்பிகை நிறுவன குழுமத்தினர் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரம் பக்தர்கள் வந்தாலும் சரி அவர்களுக்கு இல்லை என்று சொல்லாத அளவிற்கு நீர்மோர் மற்றும் கம்மங்கூழ் வழங்கி மகிழ்வது வழக்கம். அதன் அடிப்படையில் குமரர் ரத்தினசாமி பிள்ளை மற்றும் காமாட்சி அம்மாள் ஆகியோரது நினைவாக சொர்ணாம்பிகை குழுமத்தில் தலைவர் ஆர் ஜெயக்குமார் மற்றும் ரத்தின விஜய் ஆகியோரது ஏற்பாட்டில் பேரில் நடப்பாண்டு ஆடி 18 என்று சுமார் 10,000 மேற்பட்ட ரத்த கோடிகளுக்கு இலவச நீர் மோர் மற்றும் ஆகியவற்றை வழங்கி மகிழ்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராகுல் ரத்தினவேல் மிகவும் சிறப்பாக செய்திருந்தார்.

0 coment rios: