சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் ஆடிப்பெரு விழாவை ஒட்டி அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் வழிபாடு மகளிர் மன்றத்தின் சார்பில் நான்காம் ஆண்டு பால்குட ஊர்வலம்.
சேலம் லைன்மேடு பிள்ளையார் நகரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவிலில் ஆடி பெருவிழா வெகு உற்சாகமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 11-ம் தேதி முகூர்த்த நாள் நடும் விழா உடன் தொடங்கிய ஆடிப்பெருக்கு விழாவில் பூச்சாட்டுதல் கம்பம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் இன்று அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் வழிபாடு மகளிர் மன்றத்தின் சார்பில் நான்காவது ஆண்டு பால் குட ஊர்வலம் நடைபெற்றது. தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நிர்வாகிகள் சம்பத் முருகன் பெருமாள் தேவராஜ் அண்ணாமலை மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருக்கோவிலில் உள்ள மூலவர்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அடுத்து கோவில் வளாகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட பால்குடம் ஊர்வலம் தொடங்கியது. அந்தப் பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த பால்குடர் ஊர்வலமானது இறுதியில் கோவிலை அடைந்தது. இதனை அடுத்து ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆகியோருக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மூலவர்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இதனை எடுத்து வரும் ஆறாம் தேதி பொங்கல் வைபவம் மற்றும் உருளுதண்டம் நிகழ்வுகளும் தொடர்ந்து ஏழாம் தேதி ஊஞ்சல் உற்சவம் அதனை அடுத்து வரும் ஒன்பதாம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா இனிதே நிறைவு பெறுகிறது.



0 coment rios: