சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மண்டல அளவிலான தடகளப் போட்டிகள். சேலத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.
2025 மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான அளவிலான தடகள போட்டிகள் தமிழக பள்ளிக்கல்வித்துறை சேலம் மாவட்டம் மற்றும் சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீ வாசவி மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து நடத்தியது. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய மண்டல அளவிலான தடகள போட்டியில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம் 200 மீட்டர் ஓட்டம் 400 மீட்டர் தொடர் ஓட்டம் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் குண்டு எறிதல் வட்டி எறிதல் ஈட்டி எறிதல் உள்ளிட்ட அனைத்து விதமான தடகள போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகள் வெற்றி மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தங்களது முழு திறமைகளையும் வெளிப்படுத்தி விளையாடியது பார்வையாளர்களை மெதுவாக கவர்ந்தது. சேலம் மாவட்ட கல்வி அலுவலர் சேலம் மாவட்ட தனியார் பள்ளிகளின் ஆய்வாளர் மற்றும் சேலம் மாவட்ட உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்டவர் தொடங்கி வைத்த இந்த தடகள போட்டியில் ஸ்ரீ வாசவி பள்ளியின் தலைவர் ராமச்சந்திரன், தாளாளர் ராமலிங்கம், பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் ஆனந்த்சபாபதி ஊலிட்டு மண்டல அளவிலான தடகளப் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்டு வரும் இந்த போட்டிக்கான இறுதிப் போட்டி நாளை நடத்தப்பட்டு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும். நடைபெற்று முடிந்த அனைத்து போட்டிகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக மாவட்ட அளவிலும் மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 coment rios: