சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சைப்பட்டு பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழா. காங்கிரஸ் மனித உரிமை துறை சேலம் மாவட்ட தலைவர் இர்பான் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள்.
சேலம் பச்சப்பட்டி பகுதியை சார்ந்தவர் பழனிச்சாமி, இவர் தனது சிறு வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸின் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக தன்னை காங்கிரஸ் கட்சியின் இணைத்துக் கொண்டு அடித்தட்டு மக்களின் பிரச்சினைக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு சிறை சென்று வந்து தற்பொழுது தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராகவும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மனித உரிமை குறையும் மாநில துணைச் செயலாளர் ஆகவும் பச்சைப்பட்டி பழனிச்சாமி திகழ்ந்து வருகிறார். இவர் இன்று தனது 60ஆவது பிறந்தநாள் விழாவை குடும்பத்தாருடன் எளிமையாக கொண்டாடி மகிழ்ந்தார். மேலும் சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர் உட்பட கட்சி நிர்வாகிகள் அனைவரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை சேலம் மாவட்ட தலைவர் இருப்பான் மற்றும் துறை சார்ந்த நிர்வாகிகள் பலரும் பச்சப்பட்டி பழனிச்சாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

0 coment rios: