சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கழிவுநீர் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து வாடகை கடைகள். கழிவுநீர் வெளியேற முடியாததால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதி.
சேலம் மாநகராட்சியின் 31 வது கோட்டத்திற்கு உட்பட்டது கோட்டை அண்ணா நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி. ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வரும் இந்த பகுதியில் வாசித்து வரும் குடியிருப்புகளில் இருந்து கழிவு நீர் வெளியேற ஒவ்வொரு பிளாக்குகளிலும் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த அடுக்கு மாடி குடியிருப்பின் ஒரு சில பிளாக்குகளில் தரைதளத்தில் கழிவு நீர் கால்வாய்களை ஆக்கிரமித்து பீடா கடைகள் பஞ்சர் கடைகள் மளிகை கடை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் அந்த அடுக்குமாடி குடியிருப்பு தரைதள பகுதியில் அந்தப் பகுதியை சேர்ந்த குழந்தைகள் விளையாடுவதற்கான மைதானத்தையும் விட்டு வைக்கவில்லை ஆக்கிரமிப்பாளர்கள் அங்கும் குடோன்களை அமைத்து வசூல் செய்து வருகின்றனர் இந்த நிலையில் கழிவுநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சட்டவிரோத கடைகளின் காரணமாக கழிவு நீர் வெளியேற முடியாமல் சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதியில் கடுமையான சுகாதார சீர்கேட்டு ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினரிடமும் மாநகராட்சி நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்தும் பலன் இல்லாத காரணத்தினால், அதே பகுதியை சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் மன்றத்தைச் சார்ந்த சேலம் மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் மதார் என்பவர் அரசு விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக அதே பகுதியில் உள்ள கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு வந்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் இராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை வழங்கினார்.
மனுவை பெற்றுக்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கும் மாநகராட்சி மேயருக்கும் உத்தரவிட்டார். இது குறித்து சேக் மதார் நம்மிடைய கூறுகையில், மனுவில் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமல்லாமல் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வர்த்தக மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு என்று இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தையும் அந்த கடைகளுக்கு வழங்கி பணம் வசூலிப்பதாகவும் இந்த குடியிருப்புக்கு என்று தேர்ந்தெடுக்கப்பட்ட யாரும் இங்கு இருக்கவில்லை என்றும் உள் வாடகைக்கு விட்டு விட்டு கூடுதலாக சம்பந்தப்பட்ட இடத்தையும் ஆக்கிரமித்து சட்ட விரோதமாக மின்சாரத்தையும் வழங்கி வருவதாக குற்றம் சாட்டிய அவர் மாமன்ற உறுப்பினர், சேலம் மாநகர மேயர் ஆகியோர் இடத்தில் புகார் அளித்தும் பயனில்லாத காரணத்தினால் தற்பொழுது சுற்றுலாத்துறை அமைச்சரிடம் புகார் மனு வழங்கப்பட்டுள்ளதாகவும், தங்களது பிரதான இரண்டு கோரிக்கைகளான சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி சுகாதார சீ கேட்டுடன் காட்சியளித்து வரும் சேலம் கோட்டை அண்ணா நகர் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை சுத்தம் செய்து தர வேண்டும் என்பது மட்டுமே என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களிடம் வழங்கப்பட்ட புகார் குறித்தும் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், குடியிருப்பு வாசிகளை ஒன்று திரட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், தான் வகுத்து வரும் உதயநிதி ஸ்டாலின் மன்ற சேலம் மாவட்ட துணைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தங்களது பகுதி மக்களுக்கு உதவி செய்யும் கட்சியில் இணைய தயாராக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

0 coment rios: